search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக பொதுக்கூட்டம்"

    நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார்.
    நன்னிலம்:

    நன்னிலம் வடக்கு தெருவில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நன்னிலம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராம.குணசேகரன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய பாசறை செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராணிசுவாதிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பக்கிரிசாமி வரவேற்றார். நாகை கே.கோபால் எம்.பி., தலைமை பேச்சாளர் அறந்தை செல்வம் ஆகியோர் பேசினர்.

    கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளோம். உங்கள் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்துள்ளோம். என்னை எம்.எல்.ஏ.வாக உருவாக்கிய உங்களை மறக்கமாட்டேன். நீங்கள் என்றும் அ,தி.மு.க.வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சம்பத், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பு நன்றி கூறினார்.
    சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில்அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை நகர் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நகர் செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. இளைஞரணி செயலாளர் ஜெயச்சந்திரன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பின்பு ஜெயலலிதா தான் தமிழகத்தை சிறப்பாக வழி நடத்தினார். நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இந்த தொகுதியில் பலமுறை எம்.பி.யாக இருந்த ப.சிதம்பரம் தொகுதிக்கு என்ன செய்தார். ஏதாவது திட்டங்களை கொண்டு வந்துள்ளாரா. சாமானிய மக்களால் அவரை சந்திக்க தான் முடியுமா.

    இன்று (புதன்கிழமை) கிராமம் கிராமமாக சென்று மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகானந்தம், சந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் கோபி, மாணவரணி செயலாளர் என்.எம்.ராஜா, மருத்துவ அணி செயலாளர் கோட்டையன், முன்னாள் தலைவர் மானாகுடி சந்திரன், மகளிரணி பொருளாளர் கயல்விழி, எம்.ஜி.ஆர். இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் எறும்பகுடி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முத்துபாண்டி நன்றி கூறினார். 
    எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. #MGRBirthday #ADMKMeetings
    சென்னை:

    அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரது அறிவிப்பிற்கிணங்க, டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 18.1.2019 - வெள்ளிக்கிழமை முதல் 20.1.2019 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.



    பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, புரட்சித் தலைவரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MGRBirthday #ADMKMeetings
    அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் ஒன்றிய, நகர அ.தி.மு.க சார்பில் தட்டார்மடம் பஜாரில் கட்சி 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் நடைபெற்றது. ஞானபிரகாசம், கிளைச் செயலாளர் திருமணவேல், ஒன்றிய அவைத் தலைவர் பரமசிவ பாண்டியன், மாணவரணி செயலாளர் ஸ்டான்லி ஞான பிரகாஷ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன். புதுக்குளம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பாலமேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் வரவேற்றார். 

     கூட்டத்தில் அமைப்பு செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 400 பேருக்கு சேலைகளும், 100 பேருக்கு வேஷ்டியும் மற்றும் அப்பகுதியில் கல்வியில் தேர்ச்சி பெற்ற 8 பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வாட்ச் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கி பேசினார். 

    நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் நடராஜன், கருணாநிதி, அப்துல்ஹமீது, பழனிகுமார், பொன்ஸ்ரீராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் சவுந்திரபாண்டி தலைமையில் சண்முகநாதன் எம்.எல்.ஏ.வுக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொன் முருகேசன், திருமணவேல், தொடக்க கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்டவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.  

    கூட்டத்தில் மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலர் திருபாற்கடல், ஒன்றிய செயலாளர்கள் ஆறுமுகநயினார், ராஜ் நாராயணன், மாவட்ட மகளிரணி செரீனா பாக்யராஜ், முன்னாள் யூனியன் துணை சேர்மன் ஜெயராணி, ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் அகமது இப்ராகிம், பாண்டிராஜ், அப்துல்ரஷீத், பிள்ளைவிளை பால்துரை, கார்த்தீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் தட்டார்மடம் சந்திரசேகர் நன்றி கூறினார்.
    சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ராஜலெட்சுமி பங்கேற்றார்.
    சிவகிரி:

    சிவகிரியில் வாசு தேவநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் மூர்த்திபாண்டியன், மாநகர மாவட்ட இளைஞரணி செயலாளர் சவுக்கை வெங்கடேசன், ஜெயலலிதா பேரவை செயலாளர் சாமிவேல், துணை செயலாளர் பெரியதுரை, மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர்கள் ஆயில்ராஜாபாண்டியன், சின்னத்துரை, குருசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் துக்காண்டி வரவேற்றார். காசிராஜன் தொகுத்து வழங்கினார். 

    நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜலெட்சுமி, மாநகர மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, மாநகர பேரவை செயலாளர் ஜெரால்டு, சங்கரன்கோவில் நகர செயலாளர் ஆறுமுகம், தீக்கனல் லட்சுமணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் ஒன்றிய அவைத் தலைவர் முகம்மது உசேன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி பாண்டியன் செய்திருந்தார்.
    ஆரணியில் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பக்தி பாடல் பாடியதால் 15க்கும் மேற்பட்ட பெண்கள் சாமி ஆடினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #ADMK
    ஆரணி:

    ஆரணி காமக்கூரில் நேற்றிரவு அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தூசி மோகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் அரையாளம் வேலு வரவேற்றார்.

    வக்கீல் சங்கர் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்.

    கூட்டத்தில், பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜிடம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ‘இது ஆன்மீக பூமி, நான் இந்து சமய அறநிலையத்துறையாக இருப்பதால் பக்தி பாடல் பாடுங்கள். பின்னர் பேச்சை தொடங்கலாம் என்றார்.

    அமைச்சர் கேட்டுக்கொண்டதால், பேச்சாளர் செல்வராஜ் ‘மேல்மலையனூர் அங்காளியே’ என்ற அம்மன் பக்தி பாடலை இசையுடன் பாடினார். அப்போது, திரண்டிருந்த பெண் தொண்டர்களில் 15-க்கும் மேற்பட்டோர் தலைவிரி கோலத்துடன் சாமி ஆடினர்.

    இதையடுத்து, தண்ணீர் கொடுத்து சாமி ஆடிய பெண்களை தொண்டர்கள் சமரசப்படுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் பேசியதாவது:- காமக்கூர், நடுக்குப்பம், குன்னத்தூர், சம்புவராய நல்லூர் ஆகிய கிராமங்களில் ரூ.59 லட்சத்தில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறினார். #ADMK



    சென்னை மாவட்ட அதிமுக சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவிபுரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை பெரவள்ளூரில் நடக்கிறது. #ADMK
    சென்னை:

    சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஈழ தமிழர்களுக்கு எதிராக சிங்கள ராணுவத்துக்கு உதவி புரிந்த தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகள் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நாளை (செவ்வாய்) மாலை கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம் அருகில் நடக்கிறது.

    கூட்டத்துக்கு வடசென்னை வடக்கு (மே) மாவட்ட செயலாளர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு எம்.பி. தலைமை தாங்குகிறார். மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ராஜேஷ், நா.பாலகங்கா, வி.என்.ரவி, தி.நகர் சத்யா, எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி., ஜெயவர்தன் எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் பேசுகிறார்கள். செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜா, நடிகர் அஜய் ரத்தினம், முன்னாள் கவுன் சிலர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். #ADMK
     
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #edappadipalaniswami
    காஞ்சீபுரம்:

    அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி காஞ்சீபுரம் பஸ்நிலையம் அருகில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை 30 மாவட்டங்களில் சிறப்பாக நடத்தி காட்டினோம். மக்கள் கூட்டம் அலைமோதியதை பொறுக்க முடியாத எதிர் கட்சியினர் மக்களிடம் தவறான தகவல்களை பரப்பிகொண்டு வருகிறார்கள்.

    வரும் 22-ந்தேதி கன்னியா குமரியிலும், வரும் 30-ந்தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா நிறைவு விழா நடக்க இருக்கிறது. அப்போது அ.தி.மு.க.வின் வலுவினை நாட்டுமக்களும், எதிர்கட்சியினரும் அறிந்துகொள்வார்கள்.

    கண்ணுக்கு தெரியாத காற்றில் ஊழல் செய்யும் அளவிற்கு விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர்.

    நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா இருக்கும்போது எப்படி வெற்றியை தந்தீர்களோ அதே போல் தொண்டர்கள் தங்கள் முழு திறமையும் பயன்படுத்தி முழு வெற்றியை தரவேண்டும்.


    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்பார் என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் அவர் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டவர்களை வீடு வீடாகச் சென்று ஆறுதல் கூறி வருகின்றார்,

    தி.மு.க.வினர் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பில்லை கொடுக்காமல் அதன் உரிமையாளரையே அடிக்கின்றனர். வேலூரில் ஒரு செல்போன் கடையில் செல்போன் வாங்கிவிட்டு அவரையே அடிக்கின்றனர். ஒரு அழகு நிலையத்தில் தி.மு.க. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் உள்ளே சென்று ஒரு பெண்ணை அடித்து உதைக்கிறார். எதிர்கட்சியாக இருக்கும்போதே இந்த நிலை என்றால் ஆளும் கட்சியாக வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது. அ.தி.மு.க.வில் மட்டும் தான் நேர்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்தது என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சிதான். அப்படிப்பட்டவர்கள் நம்மை விமர்சனம் செய்கிறார்கள்.

    தி.மு.க.வில் தான் வாரிசு அரசியல் உள்ளது, அ.தி.மு.க. சாமானிய தொண்டர்களுக்கான கட்சி, இங்கு விசுவாசத்துடன் உழைப்பவர்கள் உயர் பதவிக்கு வருவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிக அளவில் வெற்றியை ஏற்படுத்தி தரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜா பாத் பா.கணேசன் வெள்ளியிலான விநாயகர் சிலை மற்றும் வெள்ளி வீரவாளினை பரிசாக வழங்கினார். #edappadipalaniswami
    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரியில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
    பொன்னேரி:

    திருவள்ளுர் மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் பொன்னேரி ஹரிஹரன் பஜாரில், மாவட்ட செயலாளர் சிறுனியம் பலராமன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் முன்னிலை வகிக்கிறார். கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அமைச்சர்கள் பாண்டியராஜன், பெஞ்சமின், எம்.பி.க்.கள் வேணுகோபால், வெங்கடேஷ் பாபு, திருத்தணி அரி, எம்.எல்.ஏ.க்கள் நரசிம்மன், விஜயகுமார், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் பரிமேழலகன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் பானுபிரசாத், பொதுக்குழு உறுப்பினர் பொன்னுத்துரை, சுமித்ராகுமார், சங்கர், செல்வகுமார், 11-வது வார்டு செயலாளர் வெற்றிவேல், ராமலிங்கம், உபயதுல்லா, செந்தில் குமார், சம்பத், சவுகத்அலி சலிம், நாகராஜ் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகநிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.
    மன்னார்குடியில் நடந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம், என்னை துரோகி என்று கூறிய டிடிவி தினகரன் என்ன பெரிய தியாகியா? என்று ஆவேசமாக கேள்வு எழுப்பினார். #OPanneerselvam
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் காவிரியில், தமிழகத்தின் உரிமையை மீட்டெடுத்த முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா வழிநிற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தும், சாதனைகளை விளக்கியும் மன்னார்குடியில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு அமைச்சரும், திருவாரூர் மாவட்ட செயலாளருமான ஆர்.காமராஜ் தலைமை தாங்கினார். எம்.பிக்கள் டாக்டர். கோபால், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம் வரவேற்றார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை-முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-


    காவிரி பிரச்சினை தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினை. காங்கிரஸ், தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் இந்த பிரச்சினையை கையாண்டுள்ளன. ஆனால் யாருடைய ஆட்சியில் காவிரி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது என நாம் அறிந்து கொள்வது அவசியம்.

    அ.தி.மு.க ஆட்சியில் முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்த காலகட்டத்தில் தான் சட்ட போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு காவிரியில் உள்ள உரிமையை மீட்டு தந்தார். காவிரி பிரச்சினை பல்வேறு கால கட்டங்களை கடந்து இடைக்கால தீர்ப்பிற்கு பிறகு 2007-ல் இறுதி தீர்ப்பு வந்தது. அப்போது முதல்-அமைச்சராக இருந்தவர் கருணாநிதி. தி.மு.க அப்போது மத்திய அரசிலும் கூட்டணியில் இருந்தது.

    ஆனால் கருணாநிதியால் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட முடியவில்லை. 2011-ல் ஜெயலலிதா முதல்-அமைச்சராக வந்த பின்பு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம் நேரிடையாகவும், கடிதம் மூலமாகவும் ஜெயலலிதா பலமுறை அரசிதழில் வெளியிட வேண்டுகோள் விடுத்தார். அது நடக்காததால் சட்ட போராட்டம் நடத்தி 2013-ல் அரசிதழில் வெளியிட செய்தார்.

    பின்னர் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்று காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்போது ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் அரசு, காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு அமைக்க தீர்ப்பை பெற்றது.

    ஸ்டாலின், 2016-ம் ஆண்டு எப்படியாவது முதல்-அமைச்சர் ஆகி விடவேண்டும் என்று என்னென்னவோ செய்து பார்த்தார். அது நடக்கவில்லை. மீண்டும் ஜெயலலிதா முதல்-அமைச்சரானார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வை மூன்று, நான்காக உடைத்து பார்த்தாலாவது நாம் முதல்-அமைச்சராக வாய்ப்பு வருமா என ஸ்டாலின் பார்க்கிறார். ஆனால் அ.தி.மு.கவை ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது.

    மன்னார்குடியில் சிலநாட்களுக்கு முன்பு பேசிய தினகரன் என்னை துரோகி என்று பேசியுள்ளார். தினகரன் என்ன பெரிய தியாகியா? அ.தி.மு.க.விற்காக என்ன தியாகத்தை அவர் செய்துள்ளார்?. என்னை அவர்தான் அறிமுகம் செய்தாராம். அவர் பெரியகுளம் வரும் முன்பே நான் நகர செயலாளர், நகராட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து விட்டேன். நான் அ.தி.மு.க. யுனிவர்சிட்டியில் படிக்கும்போதுதான் தினகரன் எல்.கே.ஜி. படிக்க வந்தார்.

    33 வருடங்களாக ஜெயலலிதாவுடன் இருந்தோம் என்று கூறுகிறார்கள். இவர்கள்(சசிகலா குடும்பத்தினர்), அ.தி.மு.க.வை கைப்பற்ற சதி செய்ததை ஜெயலலிதா அறிந்து கொண்டதால்தான் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்கினார்.

    என்னை தனியாக அழைத்து நீங்கள் தினகரனிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளகூடாது. தொடர்பு கொள்ள எவ்வித முயற்சியும் செய்ய கூடாது என கட்டளையிட்டார்.

    நான் உயிருடன் இருக்கும் வரை வீட்டிற்குள் தினகரனை நுழைய விடமாட்டேன் என ஜெயலலிதா கூறினார். தி.மு.க வால் ஜெயலிலதா மீது பழிவாங்க போடப்பட்ட 13 வழக்குகளில் தன்னை மட்டும் விடுவித்துக் கொண்டவர் தினகரன். அ.தி.மு.க வில் உரிமை கொண்டாடுவதற்கு இவர் யார்?. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே முதல்வராக தினகரன் சதி செய்தார்.

    தினகரன் கட்சி ஆரம்பித்த பிறகு சொந்த மாமன் கூட சண்டை. கூட பிறந்தவர்கள் உடன் சண்டை. இவை எல்லாம் பதவி ஆசையில்தான். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது திவாகரன் என்னிடம், நீங்கள் முதல்-அமைச்சராக இருங்கள் என வலியுறுத்தினார். நான் மறுத்தேன். மீண்டும் வலியுறுத்தினார். இவர்களது குடும்பத்தின் குணம் தெரிந்த நான் அவரிடம், நான் மூன்று மாதங்கள் மட்டும் முதல்-அமைச்சராக இருக்கிறேன். பின்னர் நீங்கள் வேறு யாரையாவது மாற்றிக்கொள்ளுங்கள் என கூறினேன். அதன்பிறகு அவர்களிடம் நான் பட்ட கொடுமைக்கு அளவில்லை.

    தினகரன் தானே முதல்வராக கனவு கண்டு என்னை அப்பதவியில் இருந்து நீக்க பல்வேறு சதி வேலையில் ஈடுபட்டார். சில மந்திரிகளை கூட அடித்து இருக்கிறார். எங்களுக்கு ரோ‌ஷம் இருந்ததால் வெளியே வந்து தர்மயுத்தம் தொடங்கினோம். .

    எங்கே நான் நிரந்தர முதல்-அமைச்சராக இருந்து விடுவேனோ என பயந்து என்னை ராஜினாமா செய்யச்சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். பிறகு நான் தர்ம யுத்தம் ஆரம்பித்து மூன்று மாதத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் என்னை புரிந்து கொண்டனர்.

    பின்னர் எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒன்றிணைந்தோம். அ.தி.மு.க தொண்டர்கள், நாங்கள் ஒன்றிணைய வேண்டும் என விரும்பினார்கள். தினகரன் மட்டும் தான் நாங்கள் ஒன்றிணைவதை விரும்பவில்லை.

    தேர்தலில் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுவது பகல் கனவு. ஆர்.கே நகரில் பெற்ற வெற்றியை போல் வெற்றி பெறுவோம் என தினகரன் கூறுகிறார். ஆர்.கே நகர் வெற்றி, 20 ரூபாய் டோக்கனால் வந்த வெற்றி. ரூ.10 ஆயிரம் தருவதாக கூறி 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஏமாற்றியது, உலகத்தில் தினகரன் ஒருவர் மட்டும்தான். இந்த ஆட்சியை அகற்றும் தினகரனின் எண்ணம் அ.தி.மு.க தொண்டர்களிடம் பலிக்காது. அ.தி.மு.க தொண்டர்கள் அதை முறியடிப்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #OPanneerselvam #TTVDhinakaran #ADMK
    குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. #ADMK
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தில் குன்னம் சட்டமன்ற தொகுதி சார்பாக காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் என்.கே.கர்ணன் தலைமை வகித்தார். வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினருமான முருகுமாரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.டி. ராமச்சந்திரன், சிதம்பரம் எம்.பி.,சந்திரகாசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், தலைமை கழக பேச்சாளர்கள் முருகேசன், சாமிநாதன், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜாராம், ராணி, ராகேஸ்வரி, ஆலத்தூர் ஒன்றிய துணை செயலாளர் திரிசங்கு, வக்கீல் பிரிவு ராமசாமி, குன்னம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன் உள்பட ஆலத்தூர், வேப்பூர், செந்துறை ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர் கலந்து கொண்டனர். முடிவில் செந்துறை ஒன்றிய செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார். #ADMK
    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது.

    பாலையம்பட்டி:

    அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. சார்பில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் செம்பட்டியில் நடைபெற்றது. மாவட்ட பிரதிநிதி பொன்னழகு சின்னராசு தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகவாசுதேவன், நகர பேரவை செயலாளர் சக்திவேல், பொதுகுழு உறுப்பினர் வீரசுப்பிரமணி, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரேமா முன்னிலை வகித்தனர்.

    தலைமை கழக பேச்சாளர் பண்ணை கருப்பையா, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிச்சாமி வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர்கள் செல்வராஜ், சம்ஸ்கனி பேசினர்.

    பாலையம்பட்டி ஊராட்சி செயலாளர் குருசாமி, கிளை செயலாளர்கள் சந்திரன், பெருமாள், பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்ட ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம். நகர செயலாளர் கண்ணன், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை ஆகியோர் செய்திருந்தனர். செம்பட்டி கிளை செயலாளர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.

    ×